பாரதமும் அதன் போதை சரித்திரமும் - அதனால் அந்நியரின் ஆளுமையும் - பாகம் - 1
தொடர்ச்சியான வேலைகளும் - கள்ளசாராய சாவுகள் என்னை எதையும் பற்றி எழுத தோன்றவில்லை .. இந்த போதை வாஸ்துகள் பற்றிய பல சரித்திர தரவுகளை தேடி படித்தேன் - அதனால் தொடர் பதிவு ..
முதல் சில பாகங்கள் - நமது சங்க காலத்து மனிதர்கள் போதை பழக்கம்
The link between narcotics, imperialism and capitalism has long attracted the attention of scholars !!!- பல நமபவே முடியாத பல சரித்திர தரவுகளை பார்ப்போம் !!
=========================================
சங்க கால இலக்கியங்களில் ..
சங்க இலக்கியங்களில் எங்குப் பார்த்தாலும் புலாலும் கள்ளும் பற்றிய குறிப்புகள். பழந் தமிழரின் இயற்கையோடு இயைந்த பலவகை உணவு முறைகளுள் ‘கள்’ளும் ஒன்றாக இருந்தது.
சங்க இலக்கியங்களில் காணப்படும், நாட்டை ஆளும் மன்னன் ஒருவன் தன் சக வீரனுக்குக் கள் ஊற்றிக் கொடுத்த செய்தியும் (புறம். 289), (https://puram400.blogspot.com/2011/10/289.html)
கள் உண்ட தந்தைக்கு மகள் ஒருத்தியே மீன் ஊட்டிவிட்ட குறிப்பும் (அகம். 216),
''நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள்
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்
பாண்மகள் தூண்டில் போட்டு வரால் மீனைப் பிடிப்பாள்.
அவள் தந்தை பனை நாரில் அரித்த கள்ளைப் பருகிக்கொண்டு படுத்திருப்பான்.
பாண்மகள் தான் பிடித்துவந்த வரால் மீனை வஞ்சிமர விறகில் சுட்டுத் தந்தைக்குத் தின்னக் கொடுப்பாள்.
இப்படிக் கொடுக்கும் ஊரை உடையவன் அந்த ஊரன்.
ஊரன் மனைவி சொல்கிறாளாம்.
மன்னன் அளித்த விருந்தில் புலமையில் மிகுந்த புலவர்கள் மதுவைச் சுவைத்துப் பருகிய செய்தியும் (புறம். 381, 396, 397)
சங்க காலத்தில் கள் உணவாகக் கருதிய வழக்கத்தைக் காட்டுகிறது. சங்க காலப் படைப்புலகில் பேராளுமை செலுத்திய பெண் கவி ஒளவை ‘கள்’ உண்ட செய்தியை அறிஞர்கள் அறிவர் (புறம், 235, 376).
இல்லறப் பெண்களும் கள் உண்ட குறிப்பைச் சங்க இலக்கியங்களில் (அகம். 221) காணமுடிகிறது.
இருந்த கள்ளை இருப்போர் இல்லாதோர் என இல்லந்தோறும் பகிர்ந்து உண்ட குறிப்பும் (புறம். 120)
. சமகால மனநிலையிலிருந்து இவற்றையெல்லாம் வியப்பாக மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது/பார்க்கவும் வேண்டும்.
இயற்கையான கள் வகைகளுள் பனை, தென்னை வகைகளையே இன்றைக்கு நாம் அறிவோம்.
நமது சங்க காலத்தில் ‘கள்’ பல பெயர்களில் வழங்கியுள்ளன. அரியல், தேறல், நறவு, மட்டு, மது, பிழி, வெப்பர் என்பன சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ள சில பெயர்களாகும். இந்தக் கள் வகைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உற்பத்திமுறையையும் சுவையையும் கொண்டவையாக இருந்திருக்கும். கள் எனும் பெயரிலேயே தொடரிக் கள், தினைக் கள், பனைக் கள் போன்றன பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் நூல்களில் உள்ளன.
கள் என்ற சொல் சங்க இலக்கியத்தில் வெறிநீர், பதநீர், மட்டு, தேன் ஆகிய நால்வகை பதங்களோடு குறிக்கப்படுகிறது.
மதுவில் தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள், பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு.
நெல்லால் சமைத்த கள் நறவு எனவும்,
தேனால் சமைத்த கள் தேறல் எனவும்,
பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள் தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர்.
கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்படுகின்றன.
ஆம் அன்பர்களே அவைகளை பற்றி தொடர்ந்து - விவரமாக - சாம்பார் / ரசம் செய்வது எப்படி என்பது போல சங்க கால பாடல் கொண்டு தொடர்ந்து பார்ப்போம்
விஜயராகவன் கிருஷ்ணன்

Comments
Post a Comment