பாரதமும் அதன் போதை சரித்திரமும் - அதனால் அந்நியரின் ஆளுமையும் - பாகம் - 1
தொடர்ச்சியான வேலைகளும் - கள்ளசாராய சாவுகள் என்னை எதையும் பற்றி எழுத தோன்றவில்லை .. இந்த போதை வாஸ்துகள் பற்றிய பல சரித்திர தரவுகளை தேடி படித்தேன் - அதனால் தொடர் பதிவு .. முதல் சில பாகங்கள் - நமது சங்க காலத்து மனிதர்கள் போதை பழக்கம் தொடர் பாகங்கள் - நம்மை ஆள வந்த வெள்ளைக்கார வியாபாரிகள் / நமது உள்நாட்டு வணிகர்கள் -இன்றும் ஆளும் வர்கம் எப்படி ஆட்சியை தக்க வைக்க இந்த உடனடியாக கிடைக்கும் மிக அதிகமான போதை பொருள் மொளமாக பெறப்பட்ட பணம் பயன்பட்டது என்று பார்ப்போம்!!! The link between narcotics, imperialism and capitalism has long attracted the attention of scholars !!!- பல நமபவே முடியாத பல சரித்திர தரவுகளை பார்ப்போம் !! ========================================= சங்க கால இலக்கியங்களில் .. சங்க இலக்கியங்களில் எங்குப் பார்த்தாலும் புலாலும் கள்ளும் பற்றிய குறிப்புகள். பழந் தமிழரின் இயற்கையோடு இயைந்த பலவகை உணவு முறைகளுள் ‘கள்’ளும் ஒன்றாக இருந்தது. சங்க காலத்தில் கள் ஒரு உணவாக மட்டுமே கருதப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் காணப்படும், நாட்டை ஆளும் மன்னன் ஒருவன் தன் சக வீரனுக்குக் கள் ஊற்ற...